• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘பிரதமர் மோடி குறித்து திமுகவினர் மட்டும் பொய் பேசலாமா?’: கிஷோர் கே.சாமி கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

‘பிரதமர் மோடி குறித்து திமுகவினர் மட்டும் பொய் பேசலாமா?’: கிஷோர் கே.சாமி கைதுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், , பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் ஏன் இவர்கள் (திமுகவினர்) மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

  • Share this:
திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் காயத்ரி ரகுராம், சர்வாதிகாரத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக திமுக ஐடி பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சமூக வலைத்தள பிரபலம் கிஷோர் கே.சாமியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திமுக தலைவர்களுக்கு எதிராக பேசியதற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்காக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம்.

காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்,

"திமுக தலைவர்களை விமர்சித்ததற்காக கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன். ஜனநாயகம் எங்கே போனது?

உதயநிதி ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசம்போதும், மு.க.ஸ்டாலின் பிரதமர் குறித்து பொய் பேசும்போதும், திருமாவளவன் இந்து தர்மம், பிராமணர்கள் மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசும் போதும்

I condemn Kishore K swamy arrest For speaking against DMK leaders. What happened to democracy? When Udhaynidhi Stalin can lie about PM Modi ji, CM Stalin can lie about PM Modi ji, when thirumavalavan can talk bad about Hindu dharma, Brahmins and PM,



ஒட்டுமொத்த திமுகவினருமே குறிப்பிட்ட ஒரு சமுதாயமான பிராமணர்கள் குறித்து தவறாக பேசிவருகிறார்கள், தற்போது அவர்கள் தேவேந்திர குல வேலாளர்கள் குறித்து அவதூறாக பேசுகின்றனர்.



எதிர்கட்சித் தலைவர்களை நாய்கள், துர்நாற்றம் என அழைத்த போதும், , பெண்களை அவமரியாதையாக பேசியபோதும் ஏன் இவர்கள் (திமுகவினர்) மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை? ஏன் தனி நபர்கள் மட்டும் கைது செய்யப்படுகிறார்கள்? சட்டம் சாமானியர்களுக்கு மட்டும் தானா?

Also Read:   திமுக தலைவர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி கைது

திமுகவை விரும்ப வேண்டும், திமுகவை பின்பற்ற வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அது போன்ற ஒரு சர்வாதிகாரத்தை ஏற்க முடியாது. நீங்கள் எந்த வகையில் பேசுகிறீர்களோ, அதைத் தான் திரும்பவும் எதிர்பார்க்க வேண்டும். உள்ளதை கூறியதற்காக ஒருவர் கைது செய்யப்படுவது தான் ஜனநாயகமா? திமுக அனைத்து இந்துக்களையும் மிரட்டி, கைது செய்து வருகிறது” இவ்வாறு தனது கண்டனத்தை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Also Read:   இனி காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல்களை சந்திக்கும்: மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் விரிசல்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திமுக ஐடி பிரிவு சார்பில் அளித்த புகாரினை அடுத்து கிஷோர் கே.சாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து கிஷோர் கே சாமியை 28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: