ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சபரிமலைக்கு மாலை போட்டு இப்படி பேசுவதா.. அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் சரமாரி குற்றச்சாட்டு

சபரிமலைக்கு மாலை போட்டு இப்படி பேசுவதா.. அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் சரமாரி குற்றச்சாட்டு

காயத்ரி ரகுராம் -அண்ணாமலை மாதிரி படம்

காயத்ரி ரகுராம் -அண்ணாமலை மாதிரி படம்

பாஜகவில் அண்ணாமலையுடன் இருக்கும் யாரும் தர்மத்தை பின்பற்றுவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அண்ணாமலையும் தர்மத்தைப் பின்பற்றுவதில்லை என விமர்சனம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினரிடமிருந்து மிகவும் மோசமான தனிப்பட்ட தாக்குதல்களை பெண்கள் சந்திப்பதாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்பட்டார். இதனால் காயத்ரி ரகுராம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து தமிழக பாஜக தலைமையை டிவிட்டர் மற்றும் ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினரிடமிருந்து மிகவும் மோசமான தனிப்பட்ட தாக்குதல்களை பெண்கள் சந்திப்பதாக காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டியுள்ளார். ட்விட்டரில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். பாஜகவில் அண்ணாமலையுடன் இருக்கும் யாரும் தர்மத்தை பின்பற்றுவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அண்ணாமலையும் தர்மத்தைப் பின்பற்றுவதில்லை என விமர்சித்துள்ளார்.

சபரிமலைக்கு மாலை அணிந்தும் என்னை பற்றி தவறாக பேசுகிறார். வதந்திகளையும், கிசுகிசுக்களையும் உருவாக்கி, பழிவாங்கும் வார்த்தைகளால் எனக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாக காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Gayathri Raghuram, Kerala