ஏமாற்றமடைந்த கவுதமி: ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு ட்வீட்

ஏமாற்றமடைந்த கவுதமி: ராஜபாளையம் தொகுதி மக்களுக்கு ட்வீட்

நடிகை கவுதமி

சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு விரும்பினார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் நடிகை கவுதமி...

  • Share this:
    பாஜகவில் இணைந்து பணியாற்றிவரும் குஷ்பு மற்றும் கவுதமி இருவரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட விரும்பிய தொகுதிகளில் தேர்தல் பணியாற்றி வந்தனர். ஆனால் அவர்கள் விரும்பிய தொகுதிகள் பாமக மற்றும் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    அந்த வகையில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு விரும்பினார். அதேபோல, ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்பினார் நடிகை கவுதமி. இருவரும் அந்தந்த பகுதிகளில் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

    ஆனால், அதிமுக கூட்டணி சார்பில் சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. ராஜபாளையம் தொகுதியில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களம் காண்பார் என அறிவிக்கப்பட்டது. இதனால் கவுதமி ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    இது தொடர்பாக கவுதமி தமது ட்விட்டர் பக்கத்தில் , "இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னைப் பாவித்துக் கடந்த 5 மாதங்களாக தங்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள்.

    நடிகை கௌதமி


    என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்குத் தலைவணங்கி, உங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாகக் கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன்.

    Must Read : 171 தொகுதிகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published: