சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு - தமிழகத்தில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.835

சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு - தமிழகத்தில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.835

மாதிரிப் படம்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்மூலம் தமிழகத்தில் விற்கப்படும் சிலிண்டரின் விலை 835 ரூபாயாக அதிகரித்துள்ளது.

 • Share this:
  தற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் காஸ் சிலிண்டர் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

  கடந்த ஒரு மாதத்த்துக்கு கூடுதலா பெட்ரோல், டீசல், கேஸின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டிசல் விலை 86.45 ரூபாயாக இருந்துவருகிறது. இந்தநிலையில், இன்று கேஸின் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்மூலம், தமிழகத்தில் கேஸின் விலை 835 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதியும் 16-ம் தேதியும் மாற்றியமைக்கப்படுகிறது. கடந்த மாதத்தில் மூன்று முறை கேஸின் விலை உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் 25 ரூபாயும், 16-ம் தேதி 50 ரூபாயும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 25 ரூபாயும் உயர்த்தப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 100 ரூபாய் கேஸின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: