கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைவு - நாளை முதல் அமல்

கேஸ் சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைவு - நாளை முதல் அமல்

கேஸ் சிலிண்டர்(மாதிரிப் படம்)

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 10 ரூபாய் குறைப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது.

 • Share this:
  சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தை அடிப்படையாக வைத்துத் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மட்டுமல்லாமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

  பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3வது முறையாக மாற்றி அமைக்கப்பட்டு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

  ஒரே மாதத்தில் 3வது முறையாக 14.2 கிலோ அளவு கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிலிண்டர் ஒன்றில் விலை 785 ரூபாயில் இருந்து 810 ரூபாயாக அதிகரித்துள்ளது.

  முன்னதாக கடந்த பிப்ரவர் 4ம் தேதி அன்று வீட்டு உபயோகத்திற்கான மானியமில்லாத சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அப்போது 710 ரூபாயில் இருந்து 735 ரூபாயாக சிலிண்டர் விலை உயர்ந்தது.

  பின்னர் பிப்ரவரி 14ம் தேதி எரிவாயு சிலிண்டரின் விலை அதிரடியாக 50 ரூபாய் உயர்ந்தது. அப்போது சிலிண்டரின் விலை 735ல் இருந்து 755 ரூபாயாக அதிகரித்தது. பிப்ரவரி 4ம் தேதி சென்னையில் 710 ரூபாயாக இருந்து சிலிண்டரின் விலை 25ம் தேதியான இன்று 810 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்ந்துள்ளது. தற்போது வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ சிலிண்டரின் விலை 835 ரூபாயாக உள்ளது. நாளை முதல் 10 ரூபாய் குறைந்து 825 ஆக விற்பனையாகும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: