HOME»NEWS»TAMIL-NADU»gang who smuggled cannabis to sri lanka by sea police sized rs 2 crore worth of cannabis in ramanathapuram crime video vai

கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்திய கும்பல் சிக்கியது... ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் ... (வீடியோ)

ராமநாதபுரத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா கடத்த முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:



ராமநாதபுரம் மாவட்டம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா போதை பொருள் கடத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பெரிய அளவில் கடத்தல் நடக்க உள்ளாக கிடைத்த தகவலையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார், மாவட்ட குற்றத்தடுப்பு போலீசார், கடலோர பாதுகாப்பு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்நிலையில் ராமநாதபுரம் நகரப்பகுதிக்கு அருகில் உள்ள , நேரு நகர் 7வது தெருவில் சந்தேகப்படும் வகையில் ஆள் நடமாட்டம் இருப்பதாக தெரிந்தது.

பகுதியை நோட்டமிட்ட போலீசார் இரவு நேரத்தில் மினிலாரிகள் வந்து செல்வதை கவனித்துள்ளனர். வீட்டை சுற்றிவளைத்த கேணிக்கரை போலீசார், திடீரென வீட்டிற்குள் புகுந்து சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது வீட்டில் அரிசி மூட்டையை போன்று கஞ்சா மூட்டை கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 130 மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அதில் இருந்து 260 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக வீட்டில் பதுங்கி இருந்த 58 வயதான நவாஸ்கான், அவரது மகன்கள் 27 வயதான வாசிம்கான், 20 வயதான அப்துல் வாசித் உள்பட ஒன்பது பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மொத்தமாக கஞ்சா செடிகளை வாங்கி வந்து அவற்றை உலர்த்தி, தனிதனி பாக்கேட்டுகளில் அடைத்து இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு 2 கோடி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 9 பேரை கைது செய்துள்ள போலீசார் கஞ்சா எங்கிருந்து எப்படி கடத்திவரப்பட்டது என்று தனி தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க...திரைக்கு வருவதற்கு முன்பே வெளியான மாஸ்டர் பட காட்சிகள்... டிஜிட்டல் நிறுவனத்திற்கு 25 லட்சம் நஷ்ட ஈடுகேட்டு நோட்டீஸ்... (வீடியோ)

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் மூட்டை மூட்டையாக போதை பொருளான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: