நடிகர் ஆர்யா போல் குரலை மாற்றி ஜெர்மனி பெண்ணிடம் 70 லட்சம் மோசடி செய்த கும்பல் சிக்கியது எப்படி? விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்.
டெடி, சார்பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்யா. கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகை ஆயிஷாவை ஆர்யா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த பெண் விட்ஜா, ஜெர்மனியில் குடியுரிமை பெற்று அங்குள்ள சுகாதாரதுறையில் பணிப்புரிந்து வந்வர் நடிகர் ஆர்யா 70லட்ச ரூபாய் மோசடி செய்துவிட்டதாக குடியரசு தலைவர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.
Also Read: உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்ற அமைச்சர் நாராயண் ரானே.. யார் இவர்?
அந்த புகாரில் நடிகர் ஆர்யாவுடன் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்தும், கொரோனாவில் பணக்கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தன்னிடம் 70லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலமாக பெற்று கொண்டு ஏமாற்றியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் ஆர்யா
இதனையடுத்து இந்த வழக்கானது மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. ஆர்யாவுக்கு பணம் அனுப்பியதாக கூறப்பட்ட வங்கி கணக்கு, மெசேஜ்கள் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் நடிகர் ஆர்யா கடந்த 10ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது அவரது செல்போனை பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி ஆய்வு செய்ததில் ஜெர்மனி பெண்ணுக்கு எந்த விதமான மெசேஜும், செல்போன் அழைப்புகளும் ஆர்யா செல்போன் எண்ணிலிருந்து செல்லவில்லை என்பதும், ஜெர்மனி பெண்ணுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது.
Also Read: அண்ணாமலை அனுமதியுடன் வெளியான கே.டி.ராகவனின் சர்ச்சை வீடியோ.. உண்மை பின்னணி என்ன?
இதனையடுத்து ஆர்யா போல் பேசியதாக கூறப்பட்ட அந்த நபர் யார் என சமூக வலைதளம் மற்றும் பணப்பரிவர்த்தனை செய்த வங்கி கணக்கு ஆகியவற்றை வைத்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் ஆர்யா போல் போலி வலைதளத்தை உருவாக்கி ஜெர்மனி பெண்ணிடம் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. வலைதள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

முகமது அர்மான்
இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் ஆகியோர் என தெரியவந்தது. முகமது அர்மான் நடிகர் ஆர்யாவின் தீவிர ரசிகர் என்பதும், ஆர்யாவின் புகைப்படத்தை வைத்து முகநூலில் கணக்கு ஒன்று தொடங்கி அதன் மூலமாக பல இளம்பெண்களை நண்பராக்கி உள்ளார். பின்னர் தன்னை ஆர்யா போல் அறிமுகப்படுத்தி கொண்டு பல இளம்பெண்களிடம் பேசி செல்போன் எண்ணை பெற்றுள்ளார். மேலும் இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்து ஆர்யாவை போல் குரலை மாற்றி மிமிக்ரி செய்து திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்களை நம்பவைத்துள்ளார். திருமணம் செய்துகொள்ள இளம்பெண்கள் ஒப்புதல் தெரிவித்தவுடன் ஆர்யாவின் தாயார் பேசுவது போல் முகமது அர்மான் ஆப் மூலமாக குரலை மாற்றி பேசி பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

முகமது ஹூசைனி
இதே போல் தான் ஜெர்மனி பெண்ணிடம் ஆர்யா போல் பேசி திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்ததும், அந்த பெண்ணிடமிருந்து 70லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. மோசடி செய்தவுடன் ஜெர்மனி பெண்ணை ஆர்யா தாயார் போல் பேசி மிரட்டியதும் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மைத்துனரான முகமது ஹூசைனி ஹர்மானுக்கு உடந்தையாக இருந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. குறிப்பாக ஜெர்மனி பெண் முகமது ஹூசைனி வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியதும் தெரியவந்தது.
ஜெர்மனி பெண்ணை ஏமாற்றியவுடன் குற்றத்தை உணர்ந்த இந்த கும்பல் காவல் நிலையத்தில் சரணடைய வந்ததாகவும், ஆனால் அப்போது புகார் ஏதும் வராததால் கைது செய்யாமல் அனுப்பிவிட்டதாகவும் மத்தியகுற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களிடமிருந்து 2 செல்போன்கள்,1 லேப்டாப், 1ஐபேட் மற்றும் முக்கிய ஆவணங்களை மத்தியகுற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் சென்னை அழைத்து வந்து இதே போல் வேறு பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து மத்தியகுற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.