Home /News /tamil-nadu /

மொபைல் ஆப் மூலம் கொள்ளையடித்த கும்பல்: கொள்ளையடிக்க பயன்படும் அந்த மொபைல் ஆப் எது?

மொபைல் ஆப் மூலம் கொள்ளையடித்த கும்பல்: கொள்ளையடிக்க பயன்படும் அந்த மொபைல் ஆப் எது?

மாதவரம்,

மாதவரம்,

மொபைல் செயலியில் ஒரு ரூபாய் போட்டால் இரண்டு ரூபாயாக மாற்றுவதாகும் ஒருவரை சேர்த்துவிட்டு அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அப்லோடு செய்தால் அல்லது ஷேர் செய்தால் பணம் அதிகளவில் கிடைக்கும் என கூறி ஏமாற்றிய கும்பல்.

  சதுரங்க வேட்டை பட பாணியில் ஒருவரை சேர்த்துவிட்டு பணத்தை இராட்டிப்பார்க்கும் முறையை பயன்படுத்தி  நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை சென்னை போலீசார் கைது செய்தனர்.

  சென்னை மாதவரம்  பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 28) இவர் மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். தனது அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர் சுந்தர் என்பவர் வழிகாட்டுதலின்படி ஷேர் மீ (SHAREME) என்ற செயலி மூலம் தனது செல்போனில் ஆப் லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு அதில் ஒரு ரூபாய் போட்டால் இரண்டு ரூபாயாக மாற்றுவதாகும் ஒருவரை சேர்த்துவிட்டு அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அப்லோடு செய்தால் அல்லது ஷேர் செய்தால் பணம் அதிகளவில் கிடைக்கும் என கூறியதை அடுத்து அந்த செயலில் 30,000 கட்டி வீடியோக்களை லைக் செய்து அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்பினால் ஒரு ஸ்கிரீன் ஷாட்-க்கு 18 ரூபாய் வீதம் நாளொன்றுக்கு 1800 ரூபாய் மாதம் 54 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என நம்ப வைத்துள்ளனர்.

  இதன் மூலம் தனது நண்பர்களை அதில் இணைத்துக் கொண்டதாகவும் பணம் செலுத்திய சிறிது நாளில் அந்த நிறுவனம் செயலியை நிறுத்தி விட்டதாக தன்னைப்போலவே பல நபர்கள் இதுபோல மாற்றப்பட்டுள்ளதாக ஏமாற்றப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தினேஷ் மாதவரம் குற்றப்பிரிவு பிரிவில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

  Also Read:  பிகில் படத்தை போட்டுக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.. சென்னை அரசு மருத்துவமனையில் ருசிகர சம்பவம்

  புகாரின் அடிப்படையில் அந்த செயலியை நெட்வொர்க் ஐடிகளை வைத்து சோதனை மேற்கொண்டபோது திருவல்லிக்கேணி சேப்பாக்கம் ஜாம்பஜார் உள்ளிட்ட பகுதியில் இருந்து இந்த செயலி செயல்பட்டது தெரியவந்தது.

  உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மாதவரம் தனிப்படை போலீசார் அங்கு மறைந்திருந்த சையத் பகுருதீன், மீரான் மொய்தீன், முகமது மானாஸ் ஆகிய மூவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.  இவர்கள் மூவரும் செல்போன் கடைக்கு வரும் நபர்களிடம் லாவகமாக பேசி இதுபோன்று பல பேரிடம் ஏமாற்றி பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்து இருப்பது தெரியவந்தது.

  Also Read:  தோனிக்கு 40 வயசு.. 2021 ஐபிஎல் தான் அவரின் கடைசி போட்டியா?

  இதுகுறித்து புகார் அளிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய தமீம் அன்சாரி என்பவரை தேடி வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சதுரங்க வேட்டை பட பாணியில் ஒருவரை சேர்த்துவிட்டு பணத்தை இராட்டிப்பார்க்கும் முறையை பயன்படுத்தி ஒருவரை இணைத்து  நண்பர்களை சேர்த்து  நம்பவைத்து நூதன கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை சென்னை போலீசார் கைது செய்திருப்பது செயலிகளை அதிகளவில் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  அசோக் குமார் மாதவரம் செய்தியாளர்
  Published by:Arun
  First published:

  Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Cyber crime, Madhavaram, Theft

  அடுத்த செய்தி