நாமக்கலில் திருமணப் பத்திரிகை கொடுப்பது போல் நடித்து கொள்ளையடித்து வந்த கும்பல் கைது

Youtube Video

நாமக்கல் மாவட்டத்தில், திருமணப் பத்திரிகை கொடுப்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்துக் கொள்ளையடித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நாடக கொள்ளைக் கும்பல் சிக்கியது எப்படி?

 • Share this:


  நாமக்கல் - சேலம் சாலையை ஒட்டிய முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. கோழி வியாபாரியான இவர், கடந்த வாரம் மனைவியுடன் வெளியூர் சென்றிருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 லட்சம் ரூபாயைத் திருடிச் சென்றனர். அருகில் இருந்த இன்னொரு பீரோவை திறக்க முயன்று தோல்வியடைந்து தப்பியோடினர். அதில் இருந்த தங்க நகைகள் தப்பின.

  இந்த வழக்கில், மோகனூர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய 6 பேரைக் கைது செய்து விசாரித்தனர். அதில் இன்னொரு அதி்ர்ச்சித் தகவல் வெளியானது. கைதானவர்களில் மோகனூரைச் சேர்ந்த 32 வயதான வெங்கடாசலம், 30 வயதான சரண்குமார், ஓவியம் பாளையத்தைச் சேர்ந்த 32 வயதான விக்னேஷ் ஆகிய மூவரும் நுாதனமான முறையில் கொள்ளையடித்து வந்தது அம்பலமானது.

  மோகனூர் சுற்றுவட்டாரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை இந்தக் கும்பல் நோட்டமிடும். இவர்களில் ஒருவர் மருந்து விற்பனைப் பிரதிநிதி போல நடித்து ஒவ்வொரு வீடாக சென்று நோட்டமிடுவார். அதையடுத்து இன்னொருவர் சரக்கு டெலிவரி பணியாளர் போல நடித்து மீண்டும் உறுதி செய்து கொள்ளுவார்.

  இறுதியில் 3 பேரும் சேர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டில் பெண் தனிமையில் இருக்கும் நேரம் பார்த்து திருமணப் பத்திரிகை வைப்பது போல அந்த வீட்டிற்குள் நுழைவார்கள். அந்தப் பெண் திகைத்து யார் என்ன ஏது என விசாரிப்பதற்குள் கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டு வாயில் செல்லோடேப் சுற்றி நகை, பணத்தைக் கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவார்கள்.

  மேலும் படிக்க...சென்னையில் இன்று (16-02-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை

  கைதான 3 பேரிடமும் அவர்கள் எந்தெந்த இடங்களில் கொள்ளையடித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: