மதுரையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்து வந்த கும்பல் கைது!

மதுரையில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறித்து வந்த கும்பல் கைது!

இரண்டு டூவிலர்களில் வந்த 4 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் டூவிலரை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் அவர்களை சினிமா பாணியில் துரத்தி மடக்கி பிடித்தனர்.

  • Share this:
    மதுரையில் டூவிலரில் செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்துவந்த கொள்ளையர்கள் 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மதுரை மாவட்டம் புறநகர் பகுதியான நாகமலைபுதுக்கோட்டை, செக்கானூரணி, சமயநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் டூவிலர்களில் செல்பவர்களை குறிவைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து செல்வதாக மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் குவிந்தன.

    Also read: கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: மனைவி கண்ணீர் புகார்!!

    வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் அப்பகுதியில் இரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இரண்டு டூவிலர்களில் வந்த 4 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் டூவிலரை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் அவர்களை சினிமா பாணியில் துரத்தி மடக்கி பிடித்தனர்.

    இதில் 4 வாலிபர்களும் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன், வீரமணி, பரதன், நாகராஜ், என்பதும் இவர்கள் அனைவரும் அப்பகுதியில் டூவிலர்களில் செல்பவர்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுவரும் கும்பல் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    4 வாலிபர்களையும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - சிவக்குமார் தங்கையா
    Published by:Esakki Raja
    First published: