பன்றி வாங்க வந்தது போல் நடித்து டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்களை திருடிய கும்பல் கைது

திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

  • Share this:
திருவாரூர் அருகே காட்டூர் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி நள்ளிரவு டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று போலீசாரை நோக்கி வந்துள்ளது வாகனத்தில் இருந்த இருவர் போலீசாரை கண்டவுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி தப்பி ஓடிவிட்டனர் பின்னர் வாகனத்தை சோதனையிட்ட பொழுது அதிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் வாகனத்தின் நம்பரை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர் அப்பொழுது வாகனத்தின் உரிமையாளரை பிடித்து விசாரணை செய்த பொழுது திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் மற்றும் அருண் பிரகாஷ் மணிகண்டன் ஆகிய மூன்று நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

விசாரணையில் அவர்கள் கூறியதாவது... நாங்கள் பன்றி வாங்க வந்ததுபோல் வாகனத்தில் வலைகளை எடுத்துக்கொண்டு சந்தேகம்படாதது போல் திருவாரூருக்கு வந்தோம் அதேபோல் நாங்கள் வந்து மதுபான கடையை உடைத்து மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றோம் எதிர்பாராதவிதமாக காவல்துறையினர் வாகன சோதனையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம் பின்னர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டோம் என காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் பின்னர் மூன்று பேரையும் காவல்துறையினர் திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: