ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் மோதல்!

சென்னை விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் மோதல்!

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னை காசிமேட்டில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில்  இரு பிரிவினர் மோதிக்கொண்டனர்.

காசிமேட்டில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் மேளம் அடிப்பது தொடர்பாக இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பினர் கம்புகளை வைத்து சிலரை தாக்க தொடங்கினர். இதனால் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தப்பி ஓடினர்.

இரு தரப்பினரும் கால் மணி நேரம் மோதிக்கொண்ட நிலையில், காவலர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அவர்கள் முன்பும், இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடியடி நடத்தப்படும் என காவலர்கள் எச்சரித்ததை அடுத்து இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.

பலத்த பாதுகாப்பு: புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வழிபட்ட விநாயகர் சிலைகள் திருவல்லிக்கேணி வழியாக பட்டினப்பாக்கம் கடற்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் மசூதிகள் இருப்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கமாண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

First published:

Tags: Clash, Ganesh idols, Immersal, Kasimedu