லட்டு, ஜாங்கிரி, ஜிலேபியுடன் தயாராகி வரும் உணவு பிள்ளையார்

news18
Updated: September 12, 2018, 9:41 PM IST
லட்டு, ஜாங்கிரி, ஜிலேபியுடன் தயாராகி வரும் உணவு பிள்ளையார்
பிள்ளையார் சிலை
news18
Updated: September 12, 2018, 9:41 PM IST
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் கோபாலசமுத்திரகரையில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற 108 விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, சென்னையில் 300 கிலோ எடையுடன் அமைக்கப்பட்டுள்ள உணவு பிள்ளையாரும் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திண்டுக்கல் மையப்பகுதியான கோபாலசமுத்திரக்கரையில் அருள்மிகு ஸ்ரீநன்மை தரும் 108 விநாயகர் திருக்கோவில் உள்ளது. ஆசியாவிலேயே எங்கும் இல்லாதவகையில் ஒரே கல்லிலான 32 அடி உயர மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் சிலை இங்குள்ளது சிறப்பு அம்சம். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று சுவாமிக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான மூலிகைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா சாலையில் 10 அடி உயரத்துக்கு லட்டு, ஜாங்கிரி, ஜிலேபி, முறுக்கு, அதிரசம், கேசரி, தட்டை, முந்திரி பருப்பு உள்ளிட்ட 300 கிலோ இனிப்பு வகைகளுடன் உணவுப்பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு அளிக்கும் வகையில் இந்த பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
Loading...
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...