Home /News /tamil-nadu /

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்..!

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

Ganesh Chaturthi 2022: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது இடங்களில் பல வண்ணங்கள் மற்றும் பல வடிவங்களிலும், வீடுகளில் களிமண்ணில் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆவணி மாதத்தின் வளர்ப்பிறை சதுர்த்தி தினத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில் இந்த ஆண்டு, வளர்ப்பிறை சதுர்த்தி தினமான இன்று, உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    பல வண்ணங்களில், பல வடிவங்களில் சிலை:

    நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பொது இடங்களில் பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வீடுகளிலும் பல வடிவங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    Also Read:  விநாயகர் சதுர்த்தி 2022 : வழிபடும் முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம்

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், விநாயகர் சதுர்த்தி விழாவை, கொண்டாட தேவையான பூஜை பொருட்களான பூ, பழம், தேங்காய் போன்ற பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.சென்னையை அடுத்த ஆவடி நேரு பஜாரில் இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத வண்ண வண்ண விநாயகர் தொடங்கி, பூ,பழம் மாஇலை, தோரணம் மற்றும் அலங்காரப் பொருட்களை வாங்க பொது மக்கள் குவிந்தனர். விநாயகர் சிலைகள் 50 ரூபாயில் தொடங்கி 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய கற்பக விநாயகர்:  

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. கற்பக விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார் மற்றொரு தேரில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர். தொடர்ந்து மாலை பெய்த மழையையும் பொருட்படுத்தாது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    Also Read:  விநாயகர் சதுர்த்தி 2022 : விநாயகர் மாடத்தை அலங்கரிக்க உங்களுக்கான சில யோசனைகள்..

    நெல்லை தியாகராஜ நகா் விக்ன விநாயகா் திருக்கோயிலிலும் திருத்தோ் வீதி உலா நடைபெற்றது. உற்சவா் விநாயகப் பெருமான் சா்வ அலங்காரத்துடன் திருத்தோில் எழுந்தருள தோ் பவனி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் இடங்களிலும் சிலை கரைக்கப்படும் இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா எந்த வித அசம்பாவிதங்களும் இன்றி நடைபெறுவதற்காக போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Ganesh Chaturti, Ganesh idols, Hindu Temple, Tamilnadu, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி