பாடநூல் வாரியத் தலைவர் பதவி வளர்ச்சிக்காகவா? - காந்திய மக்கள் இயக்கம் விமர்சனம்

திண்டுக்கல் ஐ. லியோனி

பட்டிமன்ற நடுவரை, பாடநூல் வாரியத் தலைவர் ஆக நியமித்ததின் மூலம், அந்த நம்பிக்கைக் கீற்றில் விரிசல் விழ வைத்துவிட்டது.

  • Share this:
    இப்பதான் ஸ்டாலின் மேல நம்பிக்கை வந்தது.. பாடநூல் வாரியத் தலைவர் பதவிக்கு லியோனியை நியமனத்தால் அந்த நம்பிக்கையிலும் விரிசல் வைத்துவிட்டதாக காந்திய மக்கள் இயக்கம் விமர்சித்துள்ளது.

    இது குறித்து காந்திய மக்கள் இயக்க மாநிலப் பொதுச் செயலாளர் பா குமரய்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அவ்வப்போது ஆட்சிக்கு வருபவர்களால் வாரியங்கள் அமைக்கப்படுவது வழக்கம். அது அந்தந்த தொழில் சார்ந்தவர்கள் மேம்பாட்டுக்காக அமைக்கப்படுவதாகக் கூறப்படுவதுண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நலவாரியம், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆட்டோ ரிக்சா மற்றும் வாடகை ஊர்தி ஒட்டுநர் நல வாரியம், தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் நல வாரியம். தமிழ்நாடு முடிதிருத்துவோர் நல வாரியம், தமிழ்நாடு தையல் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு காலணி தோல் பொருட்கள் ‘தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் நல வாரியம், தமிழ்நாடு வீட்டுப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர் நல வாரியம், தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம், சமையல் கலைஞர்கள் நல வாரியம், தமிழ்நாடு கேபிள் டிவி தொழிலாளர்கள் நல வாரியம். தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம், தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம், தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம், தமிழ்நாடு உலமா மற்றும் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு திரைப்படத் துறையினர் நல வாரியம், தமிழ்நாடு ஆடு வளர்ப்போர் நல வாரியம், தமிழ்நாடு கதர் நூல் நூற்போர் மற்றும் நெசவாளர் நல வாரியம், தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் நல வாரியம், தமிழ்நாடு பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு ஆவண எழுத்தர் நல வாரியம், பட்டாசுத் தொழிலாளர் நல வாரியம் எனத் தமிழகத்தில், நிதி, போக்குவரத்து, எரிசக்தி, வேளாண்மை மற்றும் சார்பு தொழில்கள், தொழில் ஊக்குவிப்பு, தொழிற்சாலைகள், வனப்பரிபாலனம், உணவு மற்றும் கூட்டுறவு, உள்கட்டமைப்பு, மருத்துவம், துணிநூல், ஊரகத் தொழில்கள், சமுதாய மேம்பாடு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை சார்ந்து 33 வாரியங்கள் அமைக்கப்பட்டன.

    இந்த வாரியங்கள் செயல்பட வேண்டியது அந்தந்த வாரியங்கள் சார்ந்த தொழிலாளர்களுக்கு மிக அவசியம். உதாரணமாகத் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் என்றால் கல் உடைப்போர், மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயிண்டர், கம்பி வளைப்பவர், ஃபிட்டர், சாலை குழாய் பதிப்புப் பணியாளர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், கிணறு தோண்டுபவர், கூலியாள், காவலாளி, சாலைப் பணியாளர், செங்கல் சூளைத் தொழிலாளர் உட்பட 38 வகையான தொழிலாளர்கள் அதில் இடம்பெறுவார்கள்.

    கடந்த காலங்களில் இந்த வாரியங்கள் அந்தந்த தொழில், துறை சார்ந்தவர்கள் பயன் பெறுவதற்காக என்ற நிலை மாறி, தங்கள் கட்சிகளில் தேர்தலில் தோற்றவர்கள், தேர்தலில் சீட் கொடுக்க முடியாதவர்கள், கட்சிக்கு சுப லாலி பாடியவர்கள், கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் போன்றவர்களைத் திருப்திப்படுத்தும் தளமாக மாறிவிட்டன. இவ்வாறு வாரியங்களின் தலைவர்களாக நியமிக்கப் படுகிறவர்களின் செயல்பாடுகள், வாரியம் சார்ந்து இருப்பதற்குப் பதிலாக அதிகாரம் செலுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துவதாக இருக்கின்றன.

    Read More : கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை

    மேலும், அரசுக்கும் இந்த வாரியத் தலைவர்களால், பொருளாதார இழப்பு தான் மிஞ்சுகிறது. வாரியம் தொழில் சார்ந்த தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக என்ற நிலை மாறி “வாருவதற்காக” என்ற நிலையை எட்டியுள்ளது. எனவே அந்தந்த வாரியங்களுக்குத் தலைவர் பதவி நியமிக்க வேண்டும் என்றால் அந்த வாரியத்தில் உள்ள ஒரு தொழிலாளரையே தலைவராக நியமியுங்கள். அது கௌரவப் பதவியாக மட்டும் இருக்கட்டும்.

    இதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி செலவினை மிச்சப்படுத்தலாம். இந்த அரசு வாரியங்களை, துறை சார்ந்த செயலாளர்கள் மூலமும் அமைச்சர்கள் மூலமும் திறமையாக நிர்வகிக்கலாம். அவை முறையாக இயங்கவில்லை என்றால் அதற்குத் துறை சார்ந்த செயலாளர்களும், அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும்.

    Must Read : பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நோட்டு புத்தகங்கள், பைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை அச்சிட தடை விதிக்க கோரிக்கை...

    தகுதி வாய்ந்த உயர் அதிகாரிகளைக் கொண்டு தமிழக நிர்வாகத்தைச் சீர்படுத்த முதல்வர் முயன்று வருகிறார் என்ற நம்பிக்கை கீற்றுத் தென்படத் துவங்கியுள்ள நேரத்தில், கட்சிக்காரரான அந்த ‘ரண்டக்க ரண்டக்க’ பாட்டு பட்டிமன்ற நடுவரை, பாடநூல் வாரியத் தலைவர் ஆக நியமித்ததின் மூலம், அந்த நம்பிக்கைக் கீற்றில் விரிசல் விழ வைத்துவிட்டது; இது, இனி வரும் வாரியத் தலைவர் நியமனங்களும், இதே பாணியில் தொடரும் என்பதற்கான முன்னுரையாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. மாறாக, பல வாரியங்களில் வெறும் அலங்காரத்துக்காக மட்டும் இருக்கும், வேண்டப் பட்டவர்களுக்கு புகலிடம் தரப் பயன்படுத்தப்படும் தலைவர்கள் பதவியை ஒழிப்பதின் மூலம் மாநிலத்தின் பொருளாதார நிலைக்கு வலு சேர்க்கவும், தொழிலாளர்களின் குறைகளை அதிகாரிகள் மூலம் உண்மையாகத் தீர்க்கவும் வழி கோலட்டும் என்று தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published: