ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிறுமியை வைத்து ஆபாசமாக கானா பாட்டு.. எஸ்.பி. வருண் வலையில் சரவெடி சரண்

சிறுமியை வைத்து ஆபாசமாக கானா பாட்டு.. எஸ்.பி. வருண் வலையில் சரவெடி சரண்

சரவெடி சரண்

சரவெடி சரண்

சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்க தூண்டுபவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள கானா பாடல் வரிகளுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.  டோனி ராக் – போட்டி கானா என்ற பெயரில் சரவெடி சரண் என்கிற கானாபாடகர் பாடியுள்ள வீடியோவில் சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் இருந்தது. மஜாவா மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி ( சிறுமி)..  பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்தி.. வாந்தி.. போன்ற வரிகளுக்கு கடும் கண்டனம் எழுந்தது. இந்த விவகாரம் திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் கவனத்துக்கு சென்றது.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட திருவள்ளூர் எஸ்.பி.வருண்குமார், “ குறிப்பிட்ட பாடலை பாடியவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வருவதாகவும், இவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் கூறியிருந்தார். அந்த ட்வீட்டில் போக்சோ சட்டத்தில் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளுபடியும் அறிவுறுத்தியிருந்தார். அச்சட்டப்பிரிவின் படி சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்க தூண்டுபவர்களையும் போக்சோ சட்டத்தில் கைது செய்யலாம்.

சரவெடி சரண் (சரவணன்) சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர். கானா பாடகரான இவர் சரவெடி சரண் என்ற பெயரில் யூடியூப்பில் பாடல்களை பாடி பதிவேற்றம் செய்து வருகிறார். திருவள்ளூர் எஸ்.பி வருண் குமார் உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதன்பேரில் சரவணனை கைது செய்து திருவள்ளுர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை போலீஸ் ஜாமீனில் விடுவித்தனர்.

First published:

Tags: Crime News, Sexual abuse