• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புயல் நிவாரணப் பணிகள் கண்காணிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

புயல் நிவாரணப் பணிகள் கண்காணிக்கப்படும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கஜா புயல் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஐம்பது லட்சமும், சேதமடைந்த பயிர்களுக்கு 10 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, நிவாரணப் பணிகளுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தனர்.

    ஒரே இரவில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியாது எனக் கூறி, விசாரணையை நாளை மறுநாளுக்கு (நவ. 22) நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இதேபோல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது பதில் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டதோடு, புயல் பாதித்த பகுதிகளில் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    நிவாரணப்பணிகள் தொடர்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டு வழக்கை நாளை மறு நாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: