• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா பாதிப்பு: தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

கஜா பாதிப்பு: தென்னை மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய விவசாயிகள்

தென்னை மரங்களுக்கு அஞ்சலி

தென்னை மரங்களுக்கு அஞ்சலி

காலந்தோறும் காப்பாற்றும் என்ற நினைப்பில் வளர்த்து வந்த தென்னை மரங்களை, கடந்த மாதம் இதே நாளில் (நவ.12) கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு பறிகொடுத்தனர் டெல்டா விவசாயிகள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இறந்துபோன உறவுகளுக்கு குடும்பங்கள் அஞ்சலி செலுத்தும், மக்களுக்காக வாழ்ந்த தலைவர் என்றால் மக்களும் அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால், பிள்ளைகளை போல வளர்த்த தென்னை மரங்களுக்கு, பட்டுக்கோட்டை விவசாயிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

    காலந்தோறும் காப்பாற்றும் என்ற நினைப்பில் வளர்த்து வந்த தென்னை மரங்களை, கடந்த மாதம் இதே நாளில் (நவ.16) கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு பறிகொடுத்தனர் டெல்டா விவசாயிகள்.

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் கீழே விழுந்தன. இந்த இழப்பில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் தென்னை விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    புயல் கரையை கடந்து 30 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இழந்த தென்னை மரங்களுக்கு விவசாயிகள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். பட்டுக்கோட்டை அடுத்த காசாங்குளத்தில் தென்னை ஓலைகளை கையில் வைத்துக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பேரணியாகச் சென்றனர்.

    அரசு அறிவித்த உதவித்தொகைகூட முறையாக கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் ஆதங்கம். தங்களின் வாழ்வாதாரம் மோசமாகிவிட்டதை உணர்ந்து அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    வங்கி மற்றும் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, பள்ளிகளின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்பது, மறுசாகுபடிக்குத் தேவையான தென்னங்கன்றுகள் மற்றும் உதவிகளை அரசு உடனடியாக வழங்குவது, முறையான கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பேரணி நடைபெற்றது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: