தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை
Live Updates | கஜா புயல் பாதித்த பகுதிகளின் நிலவரம் என்ன? தற்போதைய வானிலை நிலவரம் என்ன? உடனுக்குடன் தகவல்கள்... பிரத்யேக காட்சிகளுடன் களத்திலிருந்து நியூஸ்18
கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசுக்கு UPI மூலம் நிதி அளித்திட tncmprf@iob என்ற ஐடியை பயன்படுத்தலாம் என அறிவிப்பு....
17:50 (IST)
அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், நாகை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுவை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை தொடரும்... வானிலை மையம் எச்சரிக்கை
13:8 (IST)
LIVE | திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மீட்பு & நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன...
மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்...
கஜா பாதிப்பு நிவாரணமாக ₹1000 கோடி ஒதுக்கியதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு...
1. உயிரிழப்பு, கால்நடை, உடைமைகளுக்காக ₹205.87 கோடி
2. வீடுகள் சேதம் - ₹100 கோடி
3. பயிர் சேதம் - ₹350 கோடி
4. சாலை, குடிநீர் உட்பட உள்கட்டமைப்பு - ₹102.5 கோடி
5. மீன்வளம் - ₹41.63 கோடி
6. மின்சாரம் - ₹200கோடி
மொத்தம்- ₹1000 கோடி
10:22 (IST)
#LIVE | கஜா பாதித்த பகுதிகள் 6வது நாளாக முடக்கம்...
9:43 (IST)
சென்னையில் பரவலாக மழை:
அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அம்பத்தூர், பாடி, திருமங்கலம், ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால், தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை முதல் அதி கனமழை மழை பெய்ய வாய்ப்பு. - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை