• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்ற கமல்ஹாசனுக்கு மக்கள் சொன்ன பதில்?

நிவாரணப் பொருட்கள் எடுத்துச் சென்ற கமல்ஹாசனுக்கு மக்கள் சொன்ன பதில்?

கமல் ஹாசன்

கமல் ஹாசன்

கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்க சென்ற கமலிடம் எங்களிடம் உணவு இருக்கிறது மின்சாரம் தான் இல்லை என்று மக்கள் கூறியுள்ளனர்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன். இது தொடர்பாக ட்விட்டரில் அவர், அம்மையப்பன், அம்மாபேட்டை, கோட்டூர் மக்கள், கோபத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தபொழுது உணவுப்பொருட்கள் கொண்டு சென்ற எங்களிடம், எங்களுக்கு உணவு இருக்கிறது, மின்சாரம்தான் இல்லை என்று பெருந்தன்மையாக வழிவிட்டது தமிழனாக என்னை பெருமைப்படவைத்தது. இவர்களா ஏழைகள்? பெருந்தன்மைச் செல்வந்தர்கள் என்று பதிவிட்டிருந்தார்.



    மேலும், தரையில் கால் பாவிட, மக்களோடு மக்களாக நின்று பார்த்தால், கேட்டால் புரியும் சோகம், தெரியும் உண்மை! ஹெலிகாப்டரில் எவ்வளவு தாழப்பறந்தாலும் இவை தெரியாது. கேட்கிறதா அரசுக்கு? என்று மேலும் ஒரு பதிவையும் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.



    முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியிருந்த அவர், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி இந்த பாதிப்பை L-3 என்று அறிவிக்க வேண்டும். அதற்கேற்ப நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்றும் கமல் கூறியிருந்தார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: