• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • புயலின் வீரியத்தை முழுமையாக உணர்ந்துள்ளோம்: மத்திய குழு

புயலின் வீரியத்தை முழுமையாக உணர்ந்துள்ளோம்: மத்திய குழு

டேனியல் ரிச்சட்

டேனியல் ரிச்சட்

மத்தியக்குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்று புனர்வாழ்வுக்கான தேவைகள் குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கஜா புயல்பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி திரும்பிய மத்தியக்குழுவினர் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

கடந்த 15ம் தேதி கரையைக் கடந்த கஜா புயல், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் நிவாரணம் கோரியிருந்த நிலையில் சேத விவரங்களை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்தியக்குழுவினர் கடந்த 24-ம் தேதி தமிழகம் வந்தனர். புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் ஆய்வு நிறைவடைந்த நிலையில், புதுச்சேரி மாநில பகுதியான காரைக்கால் மாவட்டத்தில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.

இதன் பின்னர் சென்னை திரும்பிய மத்தியக்குழுவினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்று புனர்வாழ்வுக்கான தேவைகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்ததாகவும், மேலும் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் மத்திய அரசின் அதிகபட்ச உதவி அவசியம் என வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு, புயலின் வீரியத்தை உணர்ந்து சேத விவரங்களை சேகரித்துள்ளதாகவும், திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் , அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்தும் அறிக்கையில் சேர்க்க உள்ளதாக குறிப்பிட்டார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: