ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெற்றோரை நினைத்து கண் கலங்கினேன்... காங்கிரஸில் சீட் கேட்ட மக்கள் ராஜன் விளக்கம்..!

பெற்றோரை நினைத்து கண் கலங்கினேன்... காங்கிரஸில் சீட் கேட்ட மக்கள் ராஜன் விளக்கம்..!

மக்கள் ராஜன்

மக்கள் ராஜன்

G.rajan pressmeet | ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம் என்று ராஜன் கூறினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் பங்கேற்றப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன், தனக்கு சீட் வேண்டும் என கண்கலங்கினார்.

எனினும், ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக கட்சி மேலிடம் அறிவித்தது. இதை குறிப்பிட்டு விமர்சித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மாவட்டத் தலைவர் ஒருவரின் ஆதரவு இளங்கோவனுக்கு கிடைக்கவில்லை என்றார்.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராஜன், தான் ஞாயிற்றுக்கிழமை அழுதது பற்றி விளக்குகையில் தாய் தந்தையை நினைத்து கண்கலங்கியதாக தெரிவித்தார். மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வோம் என்றும் ராஜன் கூறினார்.

First published:

Tags: Byelection, Chennai, EVKS Elangovan