மீனவர்களுக்கான வாக்கி டாக்கி வாங்கியதில் மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் முறைகேடு செய்திருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், அவர் மீது அவதூறு வழக்கு தொடர அரசாணை வெளியிடுப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், மீனவர்கள் உயிரைப் பணயம் வைத்து ஆழ்கடலில் மீன்பிடிகிறார்கள். அவர்களுக்காக வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்த அரசாணை குறித்துப் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வாக்கி டாக்கிகள் உலக வங்கியின் நிதியைப் பெற்று முறையாக வாங்கியதாகவும். அப்படி இருக்கையில் மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் அவதூறாகப் பேசியதால், அது குறித்து முறையான அரசாணை பெற்று வழக்கத் தொடர வேண்டும் என்பதால் இந்த அரசாணை வெளியிடப்பட்டிருப்பபதாக் கூறினார்.