நாளை தளர்வற்ற முழு ஊரடங்கு.. எவையெல்லாம் கிடைக்கும்?

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுடன், இம்மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

நாளை தளர்வற்ற முழு ஊரடங்கு.. எவையெல்லாம் கிடைக்கும்?
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் சென்னையில் படிப்படியாக தொற்று குறைந்து வரும் நிலையில் பிற மாவட்டங்களல் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுடன், இம்மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

எனினும் இந்த முறை, தமிழகத்தில் டீக்கடை, உணவகங்களில் 50 சதவிகிதம் பேர் அமர்ந்து சாப்பிடலாம்; 75 சதவிகித தொழிலாளர்களுடன் பணியாற்றலாம்; கடைகள் கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கலாம் என்பன உள்ளிட்ட மேலும் சில தளர்வுகளுடன் புதிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

வழக்கமான ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கின்படி, மாநிலம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்.


இதேபோன்று மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியவாசிய, மருத்துவ வாகனங்களுக்காக மட்டும் சொற்ப அளவிலான பெட்ரோல் பங்குகள் மட்டுமே இயங்கும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading