• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரடங்கால் வெறிச்சோடிய தமிழ்நாடு! வீட்டில் அடங்காத இளைஞர்களை ரோட்டில் கவனித்து அனுப்பிய போலீஸ்

ஊரடங்கால் வெறிச்சோடிய தமிழ்நாடு! வீட்டில் அடங்காத இளைஞர்களை ரோட்டில் கவனித்து அனுப்பிய போலீஸ்

Youtube Video

முழு ஊரடங்கு என்றாலும், தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் கொரோனா நிவாரண நிதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விநியோகிக்கப்பட்டது.

  • Share this:
     தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு காரணமாக நகரங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

    முழு ஊரடங்கு காரணமாக சென்னை நகரமே வெறிச்சோடிக் காணப்படுகிறது. மாநகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் பணியாளர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

    கோயம்புத்தூரில் காலையில் பால் வாங்க மட்டும் ஒரு சிலர் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ள போலீசார் தேவையின்றி யாரேனும் நடமாடுகிறார்களா என கண்காணித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

    மதுரையில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை தடுத்து நிறுத்தும் போக்குவரத்து காவல்துறையினர், அவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து, தேவையின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றனர்.

    திருநெல்வேலியில் மக்கள் நடமாட்டமின்றி நெல்லை டவுன், பாளையங்கோட்டை பகுதியின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன. மாநகர் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றிய நபர்களை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது ஊரடங்கை மீறியதற்காக அங்கு உள்ள சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலையை 10 முறை சுற்றிவர செய்து அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.

    மயிலாடுதுறையில் கச்சேரி சாலை, சின்னக்கடை தெரு, மணிக்கூண்டு, ரயிலடி, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பில் இல்லாததால், பொதுமக்கள் பயமில்லாமல் சுற்றித் திரிகின்றனர்.

    இதனிடையே, முழு ஊரடங்கு என்றாலும், தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் கொரோனா நிவாரண நிதி காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை விநியோகிக்கப்பட்டது.

    சேலம் அஸ்தம்பட்டியை அடுத்துள்ள மணக்காடு பகுதியில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இரண்டு இறைச்சி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மூன்று இறைச்சி கடைகளுக்கு 8000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Yuvaraj V
    First published: