காஞ்சிபுரம் மாவட்டம் ஒரக்கடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தொழிற்சாலையில் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட சுமார் 2000 ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் ஆய்வு பணியை முதல்வர் மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது உண்மை. இப்போது பற்றாக்குறை சரிசெய்யப்பட்டுவிட்டது. இந்த அரசு பதவியேற்ற பின்னர் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் அதிகளவில் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர், “
ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் இரு வாரங்களுக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இருப்பினும் ஒரு வாரத்துக்கு
ஊரடங்கை அமல்படுத்தி அதன் பின்னர் நிலைமையைப் பொறுத்து நீட்டிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
தற்போது முழு ஊரடங்கிற்குப் பின்னர் பாதிப்புகள் சற்று குறைந்து வருகிறது. இருப்பினும் இது தொடர்பாக ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.