நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வராததால் விரக்தி - மருத்துவர் கனவில் இருந்த மாணவி தற்கொலை

Youtube Video

புதுக்கோட்டை மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரவில்லை என மாணவி தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 • Share this:
  ஆலங்குடி அருகே உள்ள டி-களபம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரின் மகள் ஹரிஷ்மா, 12-ம் வகுப்பு முடிந்துள்ளார். மருத்துவம் படிக்க நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில், அவருடன் படித்த சக மாணவிகளுக்கு மட்டும் ஹால் டிக்கெட் வந்துள்ளது.

  தனக்கு ஹால் டிக்கெட் வராததால், மனமுடைந்த மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  இந்நிலையில், திங்களன்று நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் மாணவி ஹரிஷ்மா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, குடும்ப பிரச்னை காரணமாக மாணவி விஷம் அருந்தியதாக பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  ஆனால், சக மாணவிகளுடன் ஹரிஷ்மாவுக்கு ஹால்டிக்கெட் வராததால் அவரின் தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் தான் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Sankaravadivoo G
  First published: