கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ் - பிரதமர் மோடி

மக்களின் வாழ்வை எளிதாக்கும் பணியை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்

news18
Updated: February 10, 2019, 8:31 PM IST
கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
news18
Updated: February 10, 2019, 8:31 PM IST
கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்கள் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி செய்துள்ளது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஆந்திராவிலிருந்து விமானம் மூலம், கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடியை விமானநிலையத்தில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் சென்றடைந்தார்.திருப்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி, பல்வேறு நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப் பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, 'அன்புச் சகோதரர்களுக்கு வணக்கம். கயிலாயம், நொய்யல், காவிரி, பவானி பாயும் மண்ணில் வாழும் மக்களை வணங்குகிறேன். தொழில் முனைவோர், அர்ப்பணிப்பு மனம் கொண்ட மக்கள் வாழும் பகுதி கொங்கு மண்டலம். மக்களின் வாழ்வை எளிதாக்கும் பணியை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது. முந்தைய அரசாங்கம் பாதுகாப்புத்துறையின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. பாதுகாப்புத்துறையில் காங்கிரஸ் கட்சி அதிக முறைகேடுகளில் ஈடுபட்டது. பாதுகாப்புத்துறையை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்திய ராணுவம் புரட்சி செய்ய உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ராணுவத்தை சிறுமைப்படுத்த எதிர்க்கட்சிகள் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. கடல் முதல் வானம் வரை பல்வேறு ஊழல்களை செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஊழலுக்காக கைதான இடைத்தரகர்கள் அனைவரும் யாரோ ஒரு தலைவருடன் தொடர்பு வைத்துள்ளனர்’ என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தான் மட்டுமே அறிவாளி என நினைக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் இங்கிருக்கிறார் - பிரதமர் மோடி


Also watch

First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...