செப்.1 முதல் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் - தமிழக அரசு

மாதிரிப் படம்

செப்.1 முதல் அரசு பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவிட்‌-19 கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள்‌
    வரை பள்ளி கல்லூரிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌, தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள்‌ மற்றும்‌ அரசு வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ அடிப்பைடையில்‌, பள்ளி மற்றும்‌ அரசு கல்லூரிகள்‌ வரும்‌ 01.09.2021 முதல்‌ திறக்கப்பட உள்ளது.

    எனவே, 2021-22 கல்வியாண்டில்‌, மாணவர்‌/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌ வரை அரசு பேருந்துகளில்‌ பள்ளி மாணவ மாணவியர்கள்‌ சீருடை அல்லது பள்ளிகளில்‌ வழங்கப்பட்ட புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து தத்தம்‌ இருப்பிடத்திலிருந்து பயிலும்‌ பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌.

    Also read: பள்ளிகளை திறக்க வேண்டாம் - எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை.!

    அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ (Govt ITI, Govt college, Govt polytechnics) பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ தங்களது கல்வி நிறுவனத்தால்‌ வழங்கிய புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து தத்தம்‌ ஒருப்பிடத்திலிருந்து பயிலும்‌ கல்வி நிறுவனம்‌ வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பு மூலம், தமிழகத்தில் செப்.1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: