• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராஜாஜி முதல் இல.கணேசன் வரை... தமிழகத்தை சேர்ந்த கவர்னர்கள்

ராஜாஜி முதல் இல.கணேசன் வரை... தமிழகத்தை சேர்ந்த கவர்னர்கள்

ராஜாஜி - இல.கணேசன்

ராஜாஜி - இல.கணேசன்

தமிழ்நாட்டிலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஆளுநராகச் செல்வது ராஜாஜி காலத்தில் தொடங்கி இன்று இல.கணேசன் வரை தொடர்கிறது. 

  • Share this:
    இந்தியா சுதந்தரம் அடைந்த கையோடு மேற்கு வங்க மாநில ஆளுநராக ராஜாஜியை நியமித்தார் நேரு. அதனைத் தொடர்ந்து வெவ்வேறு தருணங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் தமிழர்களும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம், பி.சுப்பராயன், பா.ராமச்சந்திரன், ஜோதி வெங்கடாசலம், ஈ.எஸ்.எல்.நரசிம்மன், ஜி.ராமானுஜம், பி.எஸ்.குமாரசாமி ராஜா என்று பலரும் ஆளுநர்களாகியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிறந்த நீதியரசர் எம்.எம்.இஸ்மாயில் ஒருமுறை தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்திருக்கிறார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழரான எம்.ஓ.ஹெச். ஃபரூக் மரைக்காயர் கேரளா, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.

    Also Read : உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    இப்படி காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக அளவில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான சண்முகநாதன் பாஜக ஆட்சியில் மேகாலயா, மணிப்பூர் மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

    இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநரான சி.ரங்கராஜனும் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு ஆளுநராக இருந்ததோடு, 2001 மற்றும் 2002ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கூடுதல் ஆளுநராகவும் பொறுப்பு வகித்தார்.

    வயதில் மிகவும் இளையவரான டாக்டர் தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராகவும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் செயல்பட்டுவருகிறார். தற்போது தமிழ்நாட்டிலிருந்து இல.கணேசன் மணிப்பூருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேகாலயா ஆளுநராக இருந்த சண்முகநாதனைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் இருந்து இரண்டாவது நபராக இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: