எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை... தமிழக அரசின் கடன் எவ்வளவு...?

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை... தமிழக அரசின் கடன் எவ்வளவு...?
எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.ஜி.ஆர்
  • News18
  • Last Updated: February 14, 2020, 5:41 PM IST
  • Share this:
நாளை தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழக அரசுக்கு உள்ள கடன்களின் நிலை குறித்து பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது 2,000 கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் சுமை தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த 1984-85-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 2,129 கோடி ரூபாயாக இருந்தது. கருணாநிதி ஆட்சியில் இருந்து விலகிய 2000 - 01-ம் நிதியாண்டில் 28,685 கோடி ரூபாய் தமிழக அரசின் கடனாக இருந்தது.


ஜெயலலிதா ஆட்சியில் இருந்து விலகிய 2006-ம் ஆண்டு கடன் சுமை 57,457 கோடியாக அதிகரித்தது. பின்னர், 2011-ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் போது அரசின் கடன்சுமை 1,01,439 கோடியாக உயர்ந்தது.

2012-13-ம் நிதியாண்டில் 1,20,204 கோடியாக இருந்தது. 2013-14-ம் நிதியாண்டில் 1,40,041 கோடியாக இருந்தது. 2014-15-ம் நிதியாண்டில் 1,95,290 கோடியாக இருந்தது. 2015-16-ம் நிதியாண்டில் 2,11,483 கோடியாக இருந்தது.

இந்நிலையில், 2016 -17-ம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 2,52,431 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2017 - 18-ம் நிதியாண்டில் 3 லட்சத்து 14,366 கோடி ரூபாயாக அதிகரித்தது.2018 - 19 ஆம் நிதியாண்டில் 3,55,844 கோடி ரூபாயாக உயர்து கடந்த 2019 - 20-ம் நிதியாண்டில் 3,97,495 கோடி ரூபாயாக இருந்தது. 2020 - 21 ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் அளவு 4,00,000 தாண்டும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Also see...
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading