Home /News /tamil-nadu /

ஜூன் 23-ம்தேதி முதல் தற்போது வரை அதிமுகவில் நடந்த பரபரப்பான நிகழ்வுகள்…

ஜூன் 23-ம்தேதி முதல் தற்போது வரை அதிமுகவில் நடந்த பரபரப்பான நிகழ்வுகள்…

அதிமுக அலுவலகம்

அதிமுக அலுவலகம்

ஜூலை 6 ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை விதித்தும் தீர்ப்பளித்தது.

    ஒற்றைத் தலைமை சர்ச்சை அதிமுகவில் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த 23 ஆம் தேதி முதல் தற்போது வரையிலான பரபரப்பான நிகழ்வுகள் குறித்து விவரிக்கிறது இந்த பதிவு...

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை வெடிக்கத் தொடங்கிய நிலையில் ஜூன் 23 ஆம் தேதியன்று பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன.

    அன்றே தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவிற்கு ஆதரவு கேட்டு பாஜக தலைவர்கள், ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும் தனித்தனியே சந்தித்தனர்.

    அன்று இரவு ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஜூன் 24 ஆம் தேதியன்று திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

    ‘ஜெயலலிதாவின் அண்ணன் நான்’.. சொத்தில் பங்கு கோரி முதியவர் வழக்கு

    ஜூன் 27 ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஈபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்யலாம் என கருதிய ஓ.பி.எஸ் உச்ச நீதிமன்றத்தில்  கேவியட் மனு தாக்கல் செய்தார்.

    ஜூன் 28 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்ட விதத்தை விளக்கி ஓ.பன்னீர்செல்வம் கடிதத்தை அனுப்பினார்.

    அன்று ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்.சுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக  முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? பெரும்பான்மை ஆதரவு யாருக்கு உள்ளது?

    அதேபோல அ.தி.மு.க பொதுக்குழுவில் 23 தீர்மானம் தவிர வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஈ.பி.எஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    மறுநாள் ஜூன் 29 ஆம் தேதியன்று பொதுக்குழு விவகாரம் தொடர்பாக நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அன்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கட்சியின் A மற்றும் B படிவங்களில் கையெழுத்திட்டு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    ஓ பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்திற்கு ஜூன் 30 ஆம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்பினார், அதில் ஓ.பி.எஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இல்லை என தெரிவித்திருந்தார்.

    ஜூலை 2 ஆம் தேதியன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு சென்னையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்,

    அப்போது திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    ஜூலை 6 ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுக்குழு நடத்த தடை இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடை விதித்தும் தீர்ப்பளித்தது.

    ஜூலை 7 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுக்குழுவிற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.

    ஜூலை 8 ஆம் தேதியன்று 2-வது நாளாகத் தொடர்ந்த விசாரணையின் முடிவில், தீர்ப்பு 11 ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.
    Published by:Musthak
    First published:

    Tags: ADMK

    அடுத்த செய்தி