மதுரை மருத்துவக் கல்லூரியில் கடந்த 1988-ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 96 திரைப்பட பாணியில் 30 ஆண்டுகளுக்குப் பின் வாட்ஸ்ஆப் குழு மூலம் ஒன்றிணைந்து சந்தித்துக் கொண்டனர்.
விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 96. 1996-ம் ஆண்டு பள்ளி பயின்றவர்கள் 20 ஆண்டுக்குப் பின் சந்தித்த்துக் கொள்ளும் நெகிழ்ச்சியான தருணங்கள் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். கொடைக்கானல் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற சந்திப்பு கிட்டத்தட்ட இத்திரைப்படத்தை நினைவூட்டியது. மதுரை மருத்துவக்கல்லூரியில் 1988-ம் ஆண்டு பயின்ற 120 பேரில் சுமார் 100 பேர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.
மருத்துவத்தில் மேல்படிப்புகளை முடித்து உலகெங்கிலும் வல்லுனர்களாக வலம் வரும் மருத்துவர்கள் ஒரே இடத்தில் குழுமியிருந்தனர். பழைய நண்பர்களை 30 ஆண்டுக்குப்பின் சந்தித்த மகிழ்ச்சியில் இசை நடனம் என கல்லூரி காலத்திற்கே சென்றவர்கள் வயதை மறந்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
நினைத்தாலே இனிக்கும் என்ற தலைப்பில் 3 நாட்கள் நடைபெறும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 96 திரைப்படம் போன்று வாட்ஸ்ஆப் குழு மூலம் இணைந்ததால் சந்திப்பு சாத்தியமானதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர் முன்னாள் மாணவர்களான, இந்நாள் மருத்துவர்கள்.
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மனிதர்களிடையே தூரத்தை குறைத்தாலும், நேரம் ஒதுக்கி நேரில் சந்திப்பதன் மகிழ்ச்சியே தனி என உற்சாகம் பொங்க தெரிவிக்கின்றனர் மாணவர் பருவத்திற்கு திரும்பிய மருத்துவர்கள்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 96 movie, Friends meet at Kodaikanal, Madurai Medical college students