திருமண பரிசாக சின்ன வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு வழங்கிய கலகல நண்பர்கள்

வெங்காய மாலை பரிசளித்த நண்பர்கள்

மணமகனின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல், சின்ன வெங்காய மாலை, சமையல் எரிவாயு ஆகியவற்றை பரிசாக அளித்தனர்.

 • Share this:
  மதுரவாயலில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல், சமையல் எரிவாயு வழங்கிய நண்பர்களின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  சமீப காலமாக நாடுமுழுவதும் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.  தற்போது வரலாறு காணதாத வகையில், அதிகரித்துள்ளது. இன்று 92 ரூபாய் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. மேலும் இதேபோன்று சின்ன வெங்காயம் மற்றும் சமையல் எரிவாயு விலையும் விலை உயர்ந்து காணப்படுகிறது.

  இவை தற்போது பொதுமக்களிடையே பேசுபொருளாகியுள்ள நிலையில், சென்னை மதுரவாயலை சேர்ந்த கார்த்திக்-சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மதுரவாயல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

  இதில் பங்கேற்ற மணமகனின் நண்பர்கள் 5 லிட்டர் பெட்ரோல், சின்ன வெங்காய மாலை, சமையல் எரிவாயு ஆகியவற்றை, விலை ஏற்றத்தை எடுத்துதுகூறும் விதமாக மணக்களுக்கு பரிசாக அளித்தனர்.

  Must Read : பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பின் பின்னணி என்ன?- கச்சா விலையா? மத்திய, மாநில அரசுகளின் வரிவிதிப்பா?

   

  நண்பர்களின் இந்த செயல், திருமணத்தில் பங்கேற்றவர்களிடையே  பெரும் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக அமைந்திருந்தது.
  Published by:Suresh V
  First published: