கஞ்சா அடிப்பதற்கு பணம் தராததால் நண்பரின் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள்

கஞ்சா அடிப்பதற்கு பணம் தராததால் நண்பரின் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த நண்வர்களுள் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா அடிப்பதற்கு பணம் தராததால் நண்பரின் பைக்கை பெட்ரோல் ஊற்றி எரித்த நண்பர்கள்
எரிக்கப்பட்ட இருசக்கர வாகனம்
  • Share this:
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (23) சென்னை சைதாப்பேட்டை சாரதி தெருவில் தங்கி எச்டிஎஃப்சி வங்கியில் பில் கலெக்சன் வேலை பார்த்து வருகிறார். இவருடன் திருவண்ணாமலையைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் தங்கி சென்னையில் போட்டோகிராஃபர் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ரங்கராஜ், மேற்கு சைதாப்பேட்டையில் உள்ள முனுசாமி தெருவில் குடியேறியுள்ளார். பழைய வீட்டின் வாடகை பாக்கியான ரூபாய் 2000 பணத்தை ரங்கராஜிடம் மேகநாதன் கேட்டபோது, சம்பளம் போட்ட பிறகு அந்த பணத்தை தருவதாக ரங்கராஜ் கூறியதாக தெரியவருகிறது.

இதனால், இருவருக்குள்ளும் பிரச்சனை எழுந்துள்ளது. இந்த நிலையில், மேகநாதன் கண்ணம்மாபேட்டையில் உள்ள தனது நண்பரான மணிமாறன் என்பவரது வீட்டு சுப நிகழ்ச்சிகாக புகைப்படம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அங்கு தனக்கும் ரங்கராஜூக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை குறித்து மணிமாறனிடம் போதையில் பேசியுள்ளார்.


Also read: கன்னியாகுமரியில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த சிறுவன் கைதுஇதனால் போதையில் இருந்த மணிமாறன் மற்றும் மேகநாதன் ஆகிய இருவரும் மேற்கு சைதாப்பேட்டை முனுசாமி தெருவிலுள்ள ரங்கராஜ் வீட்டுக்கு வந்து, வாடகை பணம் தரவில்லை என்றாலும் பரவாயில்லை கஞ்சா வாங்குவதற்கு பணம் கொடு என்று கேட்டதாகத் தெரியவருகிறது. தன்னிடம் ரூபாய் 900 மட்டுமே இருப்பதாகக் கூறி அந்த பணத்தை மேகநாதனிடம் ரங்கராஜ் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக் கொண்டு சென்ற இருவரும் அதிகாலையில் போதையில் வந்து ரங்கராஜ் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரின் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டுச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து ரங்கராஜ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிமாறனை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மேகநாதனை தேடி வருகின்றனர்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading