கொள்ளையடித்ததை பங்கு பிரிப்பதில் தகராறு - கூட்டாளி படுகொலை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், கொள்ளையடித்த நகை, பணத்தில் பங்கு கேட்டதால் தங்கள் நண்பரை சக கூட்டாளிகளே கொலை செய்து கிணற்றில் துாக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது

  • Share this:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில் ஒரு விவசாயக் கிணற்றில் கடந்த 18ம் தேதி போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. தகவல் அறி்ந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையைத் தொடங்கினர்.

இதற்கிடையே திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு - மாங்கால் கூட்ரோடு அருகே மது அருந்திக் கொண்டிருந்த ஒரு கும்பல் கொலை பற்றி பேசிக் கொண்டிருந்ததாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று லோகேஷ் உள்ளிட்ட 7 பேரைப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், கொலை செய்யப்பட்டவர் தீனா என்பதும் லோகேஷ் உள்ளிட்டோர் கொலை செய்தனர் என்பதும் தெரியவந்தது.


அரக்கோணம் அடுத்த சோகனூரைச் சேர்ந்தவர் 19 வயதான தீனா என்ற இளைஞர். இவரும் மேல்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர்.

மேலும் வீடு புகுந்து நகை, பணம் திருடும் குற்றங்களிலும் ஈடுபட்டனர். கொள்ளையடிக்கும், நகை, பணத்தை அனைவரும் பங்கிட்டுக் கொள்வது என்றும் முடிவு செய்து கொண்டனர்.

திருத்தணியில் நடந்த ஒரு வழிப்பறியில் லோகேஷ் உள்ளிட்டவர்கள், தீனாவுக்கு உரிய பங்கைக் கொடுக்கவில்லை. தனது பங்கைக் கேட்டு தீனா நச்சரிக்கவே, அவரைக் கொலை செய்ய முடிவெடுத்தனர்.கடந்த 17ஆம் தேதி தீனாவை மேல்பாக்கத்திற்கு அழைத்து வந்த லோகேஷ் உள்ளிட்டவர்கள் அவருடன் சேர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், தீனாவை கத்தியால் வெட்டிக் கொன்று போர்வையில் சுற்றினர்.

அங்கு பிளாட்டுக்காக நடப்பட்டிருந்த கல்லை போர்வையுடன் சேர்த்துக் கட்டி கிணற்றில் போட்டுள்ளனர். கருங்கல் கழன்று விடவே சடலம் மேலே மிதந்ததால் வெளியில் தெரியவந்துள்ளது.

 

மேலும் படிக்க:  குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ரிடர்ன்ஸ்.. ராய் ஜோன்சுடன் செப்.12-ஆம் தேதி மோதுகிறார்

இதையடுத்து, லோகேஷ், சதாம், கோகுல், அஜித், விஜி, நவீன், சச்சின் ஆகிய 7 பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்த அரக்கோணம் நகர போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
First published: July 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading