கடலூரில் திருமண ஜோடிக்கு வெங்காயத்தை பரிசாக அளித்த நண்பர்கள்...!

வெங்காயத்தை பரிசாக அளித்த நண்பர்கள்

  • News18
  • Last Updated :
  • Share this:
வெங்காய விலை எதிரொலி காரணமாக கடலூர் திருமண விழாவில் திருமண ஜோடிக்கு, நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் வெங்காய விலை விண்ணை முட்டி வருவதால் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு அத்தியாவசிய பொருளான வெங்காயம் சாமானிய மக்கள் உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலூர் மஞ்சகுப்பம் பகுதியில் நடைபெற்ற தனியார் திருமண விழாவில் மணமக்கள் சப்ரீனா, ஷாகுல்க்கு அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து வெங்காயத்தை பரிசாக அளித்தனர்.

இதனை திருமண மண்டபத்தில் இருந்த உறவினர்கள் திருமணத்திற்கு வருகை புரிந்தவர்கள் அனைவரும் வியந்து பார்த்தனர்.வெங்காயத்தின் தட்டுப்பாடு இதே நிலை நீடித்தால் கடைசியில் வெங்காயத்தை இதுபோல் திருமண விழாவிலும் காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்க முடியும் என அங்கிருந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Published by:Sankar
First published: