ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன சொத்துகள் முடக்கம்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன சொத்துகள் முடக்கம்

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆக்சிஸ் வங்கியில் 66 கோடியே 93 லட்சம் பண மோசடி வழக்கில் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவன அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம், 2017 ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் வாங்கிய 150 கோடி ரூபாய்க்காக சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் நிறுவனத்தின் 235 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது. வங்கியில் கடன் பெறுவதற்காக கூறப்பட்ட காரணங்களுக்காக பணத்தை பயன்படுத்தாமல்,வேறு தொழிலில் முதலீடு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி செய்யப்பட்டது. இந்தியன் வங்கியில் பெற்ற ரூ.120 கோடிக்கான கடன் நிலுவைத் தொகையை செலுத்தாததால் இந்தியன் வங்கி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: உற்றுநோக்கும் பாஜக… இரட்டை இலை முடக்கப்படுமா? சூடுபிடிக்கும் அரசியல் களம்

 அதேபோல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் பினாமி சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

First published:

Tags: Enforcement Directorate