ஆஸ்திரேலியா to கைலாசா... தனி விமான சேவை... ஆஃபர் அறிவித்த நித்யானந்தா

Youtube Video

ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவிற்கு தனி விமானம் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்லத் தயார் என நித்யானந்தா வெளியிட்ட அறிவி்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 • Share this:
  கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் எங்கு இருக்கிறேன் என்று சொல்லாமல் இருந்த நிலையில் தனது கையாசா நாட்டிற்கு யார் வேண்டுமானாலும் இலவசமாக வரலாம் என்று அறிவித்துள்ள தோடு தனிவிமான சேவையும் தொடங்கியுள்ளார்.

  கைலாசாவிற்கு எப்படிசெல்வது என்று பல இளைஞர்கள் ஏங்கி தவித்த நிலையில் சலுகைகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா. நீண்ட நாட்களுக்கு பிறகு மனிதர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ள அவர் ஆர்வம் உள்ளவர்கள் கைலாசா வெப்சைட் மூலமாக தன்னை சந்திக்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். தினசரி 10 முதல் 25 நபர்களை மட்டும் சந்திக்கத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்

  ஆர்வம் உள்ளவர்கள் ஆஸ்திரேலியா வந்தால் அங்கிருந்து கைலாசாவிற்கு தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அவர் தனது சத்சங்க உரையில் கூறியுள்ளார். நித்யானந்தாவைத் தேடி கைலாசாவிற்கு வரும் பக்தர்கள், 3 நாட்கள் மட்டுமே கைலாசாவில் தங்க முடியும். அதேநேரம் அந்த மூன்று நாட்களும், பக்தர்களுக்கு விசா, பயண செலவு, உணவு மற்றும் தங்கும் வசதி என அனைத்தும் இலவசம் என்று அறிவித்துள்ளார் நித்தியானந்தா.

  ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவிற்கு தனி விமானம் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்லத் தயார் என நித்யானந்தா வெளியிட்ட அறிவி்ப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதேநேரம், ஆஸ்திரேலியாவில் இருந்து அழைத்துச் செல்வதாகக் கூறியிருப்பதால் அநேகமாக இந்தோனேஷியா நாட்டின் தீவுகளில் ஒன்றையோ அல்லது நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ள ஆளில்லாத தீவுகளில் ஒன்றையோ அவர் விலைக்கோ அல்லது நீண்ட நாள் குத்தகைக்கோ எடுத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது

  3 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழும் நித்யானந்தா, தற்போது தாமாக முன்வந்து சிக்கப் போகிறாரா? அல்லது இதுவும் அவரது பழைய அறிவிப்புகளைப் போல கண்துடைப்பான ஒன்றா? பாலியல் முறைகேடு, ஆள் கடத்தல் ஆகிய வழக்குகளில் தேடப்படும் நபரான தனது இருப்பிடம் தெரிந்தால் போலீஸ் அதிகாரிகள் அவரை கைது செய்துவிடுவார்களோ என்ற அச்சமும் அவருக்கு இருக்கலாம்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: