தமிழகம் வரும் பிரதமர் காலை 11 மணிக்கு சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கம் மற்றும் சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரயில் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.
வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுவதை அடுத்து இன்று மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது. பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார். டெல்லியிலிருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்துக்கு வந்து பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அடையார் கப்பற்படை தளத்துக்கு செல்கிறார். பின்னர் அங்கிருந்து தரை வழி மார்க்கமாக பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி வருகை புரிவதால் சென்னை விமான நிலையம், அடையார் கப்பற்படை தளம், நேரு விளையாட்டரங்கம் ஆகிய பகுதிகளில் நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் வரும் பிரதமர் காலை 11 மணிக்கு சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கம் மற்றும் சென்னை கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான 4-வது ரயில் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். அத்துடன், விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் வரையிலான மின்மயமாக்கப்பட்ட ஒரு வழி ரயில் பாதையையும் பிரதமர் தொடக்கி வைக்கிறார்.
மேலும், கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து, அர்ஜூன் எம்.பி.டி., MK-IA ரக கவச வாகனத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுவதை அடுத்து இன்று மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது. பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயிலில் கட்டணம் வசூலிக்கப்படாது.