பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் தேவையற்றது - சீமான் அதிரடி

சீமான்

முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருப்பதை எடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியிருப்பது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது.

 • Share this:
  பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் அரசு வழங்குவது தேவையற்றது என்று நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த போது, சிறப்பு முகாம்களை மூட வேண்டும்.Q பிரிவு காவல்துறையை கலைக்க வேண்டும். சிறப்பு முகாம்களை அமைத்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். முதல்வர் இலங்கை தமிழர்களுக்கு அறிவித்த திட்டங்கள் கால தாமதமானது.இருப்பினும் வரவேற்கிறோம்.

  காங்கிரஸ் பாஜக தலைமையில் அமைந்த அரசுகள் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மறுக்கிறது. திபெத் மக்களுக்கு பல சலுகைகள் வழங்குகிறார்கள்.இலங்கை தமிழர்களை சட்டத்திற்கு புறம்பானதாதாக குடியேறினார்கள் என சொல்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்.

  Also Read : தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக சுந்தரேஷ் நியமனம்.. பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

  திராவிட கட்சிகளின் ஆட்சி மக்களை ஏமாற்ற மட்டுமே. அரசியல் தலைவர்களின் படங்கள் கல்வி புத்தகங்களிலும் கைகளிலும் இடம்பெறுவது தேவையற்றது. முன்னாள் முதல்வர்கள் படங்கள் இருப்பதை எடுக்க வேண்டாம் என முதல்வர் கூறியிருப்பது அரசியல் நாகரிகத்தை காட்டுகிறது.

  நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக. நீட்டுக்காக மக்கள் போராட்டம் கிளர்ச்சி ஏற்பட்டதற்காக திமுக எதிர்க்க தொடங்கியது. போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு மூலம் மக்களை சரசரி வாழ்கைக்கு கொண்டுவர அரசு முயற்சிக்கிறது. ஊரடங்கை மக்கள் விரும்பவில்லை.நோயை விட முடக்கம் என்பது மக்களை மிகவும் பாதிக்கிறது.

  அதிகாரித்தில் இருப்பவர்கள் அழுத்தம் கொடுத்து இரட்டை குடியுரிமையை வழங்கவேண்டும். பெண்களுக்கு இலவச பயணம் என அரசு அறிவித்தது தேவையற்றது. 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடன் என சொல்லும் அரசு எப்படி கடனானது என தெரிவிக்க வேண்டும்.. கட்டணம் குறைப்பு செய்யலாம் இலவசம் தேவையில்லை என்றுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: