ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நகரப்பேருந்துகள் அனைத்திலும் பெண்களுக்கு இலவச பயணம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க இபிஎஸ் கோரிக்கை!

நகரப்பேருந்துகள் அனைத்திலும் பெண்களுக்கு இலவச பயணம்.. தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க இபிஎஸ் கோரிக்கை!

கட்டணமில்லா பேருந்து பயணம்

கட்டணமில்லா பேருந்து பயணம்

நகரப்பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துவிட்டு, பிங்க் நிறம் பூசப்பட்ட பேருந்தில் மட்டுமே கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அனைத்து நகரப் பேருந்துகளிலும் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருவதாகவும், மகளிர் எளிதாக பயணம் மேற்கொள்ளவே பிங்க் நிறம் அடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

பேருந்துகள் FCக்கு செல்லும் போது படிப்படியாக நிறம் மாற்றம் செய்யப்படும் என கூறினார். மேலும், பேருந்தில் பெண்களின் பயணம் 24% அதிகரித்து 64% ஆக உள்ளதாகவும் எதிர்கட்சி தலைவருடன் ஆய்வு மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

First published:

Tags: Chennai, Govt Bus, Public Transport, Tamilnadu government