அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் காலணிகளுக்கு பதிலாக ஷுக்கள் வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச காலணிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு காலணிகளுக்கு பதில் ஷூ மற்றும் சாக்ஸ் வழங்க உள்ளதாகவும், இதனால் அரசுக்கு சுமார் 10 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.