மூத்த குடிமக்களுக்கு இலவச பயண டோக்கன் - சென்னை மாநகர போக்குரத்துக் கழகம் அறிவிப்பு

மூத்த குடிமக்களுக்கு இலவச பயண டோக்கன் - சென்னை மாநகர போக்குரத்துக் கழகம் அறிவிப்பு

கோப்பு படம்

மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது.

 • Share this:
  மாநகர் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

  60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டம் தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

  அதன்படி சென்னை மாநகருக்குட்பட்ட தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களுடன் வந்து இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன்களை அருகில் உள்ள பணிமனைகளில் பெற்றுக் கொள்ளுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: