ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் - விழாவை காண பக்தர்களுக்கு கட்டணமில்லா முன்பதிவு வசதி அறிமுகம்!

பழனி மலைக்கோயில் கும்பாபிஷேகம் - விழாவை காண பக்தர்களுக்கு கட்டணமில்லா முன்பதிவு வசதி அறிமுகம்!

பழனி கோவில்

பழனி கோவில்

பழனி கோவிலில் ஜனவரி 27 ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிசேகத்தைப் பகதர்கள் இலவசமாக பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பழனி கோவிலில் ஜனவரி 27 ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தைக் காணப் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு குறித்த விபரங்கள் குறித்த அறிவிப்பைக் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் மலைக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா வருகின்ற 27.01.2023-ம் தேதியன்று காலை 8.00 மணி முதல் 9.30 மணி முடிய நடைபெறவுள்ளது.

திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக இணையதளம் மூலம் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் 2000 எண்ணிக்கையிலான கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

கோயிலின் இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in மற்றும் வலைத்தளங்களின் இத்துறை வலைத்தளமான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பக்தர்கள் www.hrce.tn.gov.in ஆகிய இணையத்தளம் மூலம் பக்தர்கள் 18.01.2023 முதல் 20.01.2023 முடியக் கட்டணமில்லா முன்பதிவு செய்யும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டணமில்லா முன்பதிவு செய்வதற்குப் பக்தர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களின் ஏதேனும் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும்.

1. நிரந்தர வருமான வரி கணக்கு அட்டை (PAN CARD)

2. வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) 3. பாஸ்போர்ட் (Passport)

4. நடப்பு வங்கி சேமிப்பு கணக்கு (Bank Pass Book) 5. ஓட்டுநர் உரிமம் (Driving License)

6. குடும்ப அட்டை(Ration Card)

7. தேசிய அடையாள அட்டை (Aadhaar Card)

தங்களது கைப்பேசி எண்ணுடன் (Mobile Number) மின்னஞ்சல் முகவரி இருப்பின் (E-Mail Id) விவரம் தந்து முன்பதிவு செய்து கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

21.01.2023 தேதியன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்களுக்கு (Confirmed Message) பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கும்/கைப்பேசி எண்ணிற்கும் 22.01.2023 ம் தேதி அனுப்பப்படும்.

Also Read : பொங்கல் பண்டிகை : சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்... கடும் வாகன நெரிசலால் ஸ்தம்பிக்கும் சென்னை ஜிஎஸ்டி சாலை..!

உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்/குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவுடன்  23.01.2023 தேதி முதல் 24.01.2023 தேதி வரை உள்ள நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தாங்கள் பதிவேற்றம் செய்த அடையாள சான்றிதழ்கள் நகல் கொண்டு வந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான இரயில்வே பீடர்ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் கட்டணமில்லா சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்பு வருவோர்களுக்கு வழங்க இயலாது. இந்த அனுமதிச் சீட்டு கம்பிவட ஊர்தி (Ropecar), மின் இழுவை இரயில் (Winch) சேவைக்குப் பொருந்தாது. படிப்பாதை வழியாக மட்டுமே மலைக்கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக் கோவில் நிர்வாகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Palani, Palani Murugan Temple