Home /News /tamil-nadu /

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது? அன்பில் மகேஷ் அறிவிப்பு

மாணவர்களுக்கு இலவச லேப்டாப் எப்போது? அன்பில் மகேஷ் அறிவிப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களுக்கு மிக விரைவில் படிப்படியாக லேப்டாப் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில்  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. அதை தொடர்ந்து சட்டப்பேரவையின் 2-்ம் நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், "அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் உள்ளது என கேள்வி எழுப்பினார்.

    இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் இதுவரை 222 வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டியவர் தமிழக முதலமைச்சர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2018 -19 ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காமல் நிலுவையில் உள்ளது. தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப மாணவர்களுக்கு மிக விரைவில் படிப்படியாக லேப்டாப் வழங்கப்படும்", என்றார்.

    இதையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் திருமண உதவி வழங்கப்பட்டு வருகிறதா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திருமண உதவித் திட்டத்திற்கு தமிழக அரசு 722 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

    Also Read : ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் : முதலமைச்சர் உறுதி

    இதுவரை 9,000 பெண்களுக்கு திருமண உதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருமண உதவி திட்டம் நிலுவையில் இருந்தது. 3 லட்சத்து 13 ஆயிரம் பேருக்கு தராமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.அவர்களுக்கும் அந்த நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

    இதுமட்டுமல்லாமல் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தை களுக்கு நிவாரணம் வழங்குவது முதலமைச்சர் அவர்கள் எளிதில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, TN Assembly

    அடுத்த செய்தி