ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இலவச லேப்டாப் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இலவச லேப்டாப் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இலவச லேப்டாப்

இலவச லேப்டாப்

Free Laptop | கடந்த 2020 - 21ம் கல்வியாண்டில் 5,32,000 லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு இதுவரை லேப்டாப்கள் வழங்கப்படவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கு அரசின் இலவச லேப்டாப்கள் வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2020 - 21ம் கல்வியாண்டில் 5,32,000 லேப் டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  மாற்றுத் திறனாளி மாணவ - மாணவியருக்கு இதுவரை லேப்டாப்கள் வழங்கப்படவில்லை என்வும் இவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

Also Read : ஆப்பரேஷன் மின்னல்.. கைதான 2309 ரவுடிகளை விடுவித்த மர்மம் என்ன? - ஈபிஎஸ் கேள்வி

இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அரசுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, திட்டம் அமலில் இருந்தால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கலாமே என அரசுக்கு அறிவுறுத்தி மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளீ வைத்தனர்

Published by:Vijay R
First published: