ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓசில போகமாட்டேன் என பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு? காவல்துறை விளக்கம்!!.

ஓசில போகமாட்டேன் என பேருந்தில் டிக்கெட் கேட்ட பாட்டி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு? காவல்துறை விளக்கம்!!.

இணையத்தில் வைரலான மூதாட்டி துளசியம்மாள்

இணையத்தில் வைரலான மூதாட்டி துளசியம்மாள்

அதிமுகவை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாவை பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்ய சொல்லி , அதை வீடியோவாக பதிவு செய்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்ட வயதான பாட்டியின் மீது 4 பிரிவின் கீழ் மதுக்க்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

  அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, பெண்கள் ஓசியில் பயணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு எதிர்வினையாக கோவையில் அரசு பேருந்தில் ஏறிய மூதாட்டி ஒருவர் ஓசியில் பயணிக்க மாட்டேன் என காசு கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

  கோவை மாநகரில் மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வயதான மூதாட்டி ஒருவர், மகளிருக்கு அரசு பேருந்தில் பயணிக்க இலவசம் என தெரிந்தும் நடத்துநரிடம் காசை கொடுத்து டிக்கெட் கொடுக்கும்படி கேட்டார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த மூதாட்டி துளசியம்மாவை பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்ய சொல்லி , அதை வீடியோவாக பதிவு செய்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பரவ விட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  Also Read: ரயில் பயணத்தின்போது பாதி வழியில் அமைச்சர் மெய்யநாதனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

  இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த பிரிதிவிராஜ், மதிவாணன் , விஜய் ஆனந்த் மற்றும் மூதாட்டி துளசியம்மாள் உள்ளிட்ட  நான்கு பேர் மீதும் மதுக்கரை போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து இது குறித்து விளக்கம் அளித்துள்ள கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மதுக்கரை மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என்றும்  மூதாட்டி மீது  வழக்குகள் எதும் பதிவு செய்யவில்லை என்றும் தவறான தகவல்கள் பரப்பட்டு வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published: