ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உஷார்.! FIFA உலகக்கோப்பை கால்பந்தை பார்க்க 50ஜிபி இலவச டேட்டாவா? எச்சரிக்கும் போலீஸ்

உஷார்.! FIFA உலகக்கோப்பை கால்பந்தை பார்க்க 50ஜிபி இலவச டேட்டாவா? எச்சரிக்கும் போலீஸ்

டேட்டா

டேட்டா

இந்த மெசேஜ்-இன் உண்மைதன்மையை அறியாமல் பலரும் இந்த லிங்க்கை கிளிக் செய்வதோடு இந்த மெசேஜையும் ஃபார்வோர்டு செய்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  uஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண இலவசமாக 50ஜிபி டேட்டா வழங்கப்படுவதாக லிங்க் ஒன்று பரவிவரும் நிலையில், இது குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை தெரிவித்துள்ளது.

  ட்ரெண்டிங்கில் இருக்கும் நிகழ்வுகளை வைத்து மோசடி செய்வது என்பது எப்போதுமே நடைபெறும் ஒன்றுதான். அதிலும் இணையம் மூலம் நிகழும் மோசடிகள் பெருமளவில் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் இத்தகைய மோசடிகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது அவசியமான ஒன்று.

  இந்த லிங்கை கிளிக் செய்தால் 2000 ரூபாய் மதிப்பிலுள்ள பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், இந்த லிங்கை கிளிக் செய்தால் ஐபோனை இலவசமாக பெறலாம் என பிரபலமான நிறுவனங்களின் பெயரில் மெசஞ்சர், வாட்ஸ் அப் போன்றவற்றுக்கு மெசஜ் அனுப்பப்படும். இதனை நாம் நம்பு கிளிக் செய்தால், நமது தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை ஹேக்கர்கள் எளிதாக திருடக்கூடும்.

  இந்நிலையில்தான், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியை குறிப்பிட்டு ’FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 உலகக் கோப்பையைப் பார்க்க 50ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதைப் பெற்றேன். இதை திறக்கவும்” என கூறி ஒரு லிங்க் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

  இதையும் படிங்க: Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

  இதன் உண்மைதன்மையை அறியாமல் பலரும் இந்த லிங்க்கை கிளிக் செய்வதோடு இந்த மெசேஜையும் ஃபார்வோர்டு செய்து வருகின்றனர். இந்நிலையில், இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் புகார்களுக்கு  1930 என்ற எண்ணை தொடர்புகொள்ள வேண்டும் அல்லது  https://cybercrime.gov.in/ என்ற இணைய பக்கத்தில் புகார் அளிக்கவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Cyber crime, Cyber fraud