உலக முதலீட்டாளர் மாநாட்டில் மோசடி? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2019-ம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற உள்ளது.

Tamilarasu J | news18
Updated: January 11, 2019, 1:20 PM IST
உலக முதலீட்டாளர் மாநாட்டில் மோசடி? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம்
Tamilarasu J | news18
Updated: January 11, 2019, 1:20 PM IST
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் பின்னணியை ஆராய வேண்டும் எனத் தமிழ் நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆராயாததால் மோசடிகள் நடைபெற்றுள்ளது.

எனவே இந்த ஆண்டு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்களின் பின்னணி குறித்து மாநில அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் கூறியுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 27 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும், 44,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை செய்ய உள்ளதாகவும், 50,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புப் படி இந்த 27 நிறுவனங்களின் பின்னணியையும் தமிழ் நாடு அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

தமிழ் நாட்டில் நடைபெற உள்ள இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Loading...
முதலீட்டாளர் மாநாட்டைச் சிறப்பாக நடத்த 90 கோடி ரூபாயில் சென்னை முழுவதும் பல்வேறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: வெறும் நூல் அல்ல நூலகம்...! வாசகர்களின் வரவேற்பை பெற்ற புத்தகம்
First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...